இலங்கையில் இன்னும் சில நாட்களில் நாடே முடங்கும் சூழல்

கொழும்பு : இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு எரிபொருளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. அத்தியாவசிய சேவைக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது.
இதனால், கொழும்புவில் அதிபர் அலுவலகம் முன்பு ஆசிரியர்களும், மருத்துவ பணியாளர்களும் போராட்டம் நடத்தினர். இலங்கையில் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் நாடே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசு, பொதுப்போக்குவரத்து இயங்கும் என கூறப்பட்டிருந்தாலும், பல இடங்களில் பல இடங்களில் பேருந்துகள் இயங்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. ஏற்கெனவே உணவுப்பற்றாக்குறை நிலவும் சூழலில், இப்போதைய எரிபொருள் நெருக்கடி, இலங்கை மக்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.