August 16, 2022

போர் தணியாத நிலையில் வெளிநாடுகளில் இருந்து உக்ரைன் திரும்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

உக்ரைன்: தாயகம் திரும்பி வரும் மக்கள்… ரஷ்யா- உக்ரைன் மோதல் தணியாத நிலையில், ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடுவதற்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் உக்ரைன் மக்கள் தாயகம் திரும்பி வந்து கொண்டு இருக்கிறனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி நாடு திரும்பும் உக்ரைன் நாட்டவர் ஒருவர் டோஹா விமானநிலையத்தில் காணப்பட்ட தனது நாட்டின் கொடியால் தன்னை போர்த்தியிருந்தார். அவர் நேபாளத்தில் ஐநாவிற்காக பணியாற்றியவர். இதன் காரணமாக உக்ரைன் எல்லைக்குள் சென்றால் அவரால் திரும்பி வரமுடியாது ஆனால் தனது தனிப்பட்ட பயணம் முற்றிலும் தனிப்பட்டவிடயம் என தெரிவித்த அவர் தனக்கு இது மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டதுடன், எனது நாட்டில் இருக்க விரும்புகின்றேன் அதுவே முதல் விடயம் என அவர் தெரிவித்தார்.

நாங்கள் வெற்றி பெறப்போவதற்கு இது இன்னுமொரு காரணம் என அவர் தெரிவித்தார். அதேசமயம் உலகின் பல பாகங்களில் இருந்தும் உக்ரைனிய மக்கள் தங்கள் நாட்டில் தங்கள் மக்களுடன் இருப்பதற்காகவும் எதிர்காலத்திற்காக போராடுவதற்காகவும் தங்கள் நாட்டிற்கு திரும்புகின்றனர். அன்டிரி டோகாவிலிருந்து வோர்சோ சென்றார்,

பொருட்களை எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறி எல்லைக்கு சென்றதுடன் , தற்போது அவர் உக்ரைனின் மேற்கு பகுதியில் இருக்கின்றார். தங்கள் தாயகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கும் பல உக்ரைனியர்கள் மேற்கு வோர்சோவிலிருந்து போலந்து வழியாக உக்ரைன் எல்லைக்கு செல்கின்றதாகவும், உக்ரைனிலிருந்து தப்பி வெளியேறும் மக்களுடன் வரும் பேருந்துகள் பின்னர் எல்லையில் இருப்பவர்களை ஏற்றிக்கொண்டு உக்ரைன் செல்கின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒலெக்சாண்ட்ரிற்கு பயிற்சி மற்றும் படைனுபவங்கள் உள்ளன. ஆனால் அவருடன் அந்த பேருந்தில் பயணம் செய்யும் ஏனையவர்கள் எந்த யுத்தத்திலும் ஈடுபடாதவர்கள். நான் மாலுமி நான் தற்போது அமெரிக்காவிலிருந்து வருகின்றேன் என்கின்றார் ஒலே நொவிக்கோ . மெரிபோலில் உள்ள எனது வீடு ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களால் சூழப்பட்டுள்ளது, எனது மனைவியும் மகனும் உள்ளே உள்ளனர் ஆகவே நான் அங்கு செல்லவேண்டும் என்கின்றார் அவர்.நான்அருகில் உள்ள இராணுவமுகாமிற்கு செல்வேன்,நான் போரிட விரும்புகின்றேன் எனக்கு அனுபவமில்லை நான் மாலுமி என்கின்றார் அவர்.

சுமார் 2 மில்லியன் உக்ரைனியர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 70 வீதமானவர்கள் ஆண்கள் எனவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!