September 27, 2022

நான்காவது தொழிற்புரட்சியில் உலகிற்கு இந்தியா வழிகாட்டுகிறது – பிரதமர் மோடி

காந்தி நகர் : குஜராத் மாநிலம் காந்தி நகரில் புதிய இந்தியாவுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி, டிஜிட்டல் இந்தியா வாரம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா இயக்கம், பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், நான்காவது தொழிற்புரட்சியில் உலகிற்கு இந்தியா வழிகாட்டுவதாக பெருமையுடன் நாம் கூறமுடியும். இதில் குஜராத் மாநிலம் முன்னணியில் உள்ளது. பிறப்பு சான்றிதழ் பெறுவது, ரசீது தொகை செலுத்துதல், மாணவர் சேர்க்கை, தேர்வு முடிவுகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் போன்றவற்றை ஆன் லைன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இந்த சேவைகள் சாதாரண மக்களும் மிகவும் எளிதில் அணுகக் கூடியதாக மாற்றப்பட்டுள்ளன.

நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் கடந்த எட்டு ஆண்டுகளில் 23 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை மூலம் 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 300 பில்லியன் டாலர் மதிப்பிற்கு மேல் மின்னணு பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில் இந்தியா இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!