March 28, 2024

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி டிரா

சலாலா (ஓமன்): ஆண்களுக்கான ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் நாட்டில் உள்ள சலாலா நகரில் நடைபெற்று வருகிறது.

‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், தாய்லாந்து, சீன தைபே அணிகளும், ‘பி’ பிரிவில் மலேசியா, தென் கொரியா, வங்கதேசம், ஓமன், உஸ்பெகிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. முதல் லீக் ஆட்டத்தில் சீன தைபே அணியை 18-0 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, 2வது லீக் ஆட்டத்தில் ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்நிலையில் நேற்று இந்தியா தனது 3வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய தரப்பில் ஷர்தா நந்த் திவாரி 24-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். இடைவேளை வரை இது தொடர்ந்தது. ஆனால் ஆட்டத்தின் 2-வது பாதியின் போது பாகிஸ்தானின் பஷரத் அலி ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் இந்த கோல் அடிக்கப்பட்டது. ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது.

இது இறுதி வரை தொடர்ந்ததால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்தியா 3 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!