July 2, 2022

தக்காளியை மலிவு விலையில் விற்க தமிழக அரசு நடவடிக்கை – அமைச்சர் தகவல்

சென்னை : தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளியை மலிவு விலையில் விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், தமிழகத்தில் பருவமழை காரணமாக தக்காளியின் விலை வெளிச்சந்தையில் உயர்ந்துள்ளதை கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்க, தமிழக அரசு கூட்டுறவுத் துறையின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு துறை நடத்தி வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் முதல் கட்டமாக 4 மெட்ரிக் டன் அளவிற்கு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தக்காளியின் வெளிச்சந்தை விலை கட்டுப்படுத்தப்படும் வரை இந்த நடவடிக்கை இன்று முதல் அனைத்து மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறை நடத்தி வரும் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மேற்கொள்ளப்படும். மேலும் தேவையின் அடிப்படையில் நியாய விலைக்கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!