September 29, 2022

தீ விபத்துக்குள்ளான கப்பலுக்கு இழப்பீடு கிடைத்துள்ளதாக தகவல்

இலங்கை: இழப்பீடு வந்துள்ளது… தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு இழப்பீடாக சுமார் ஒரு பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

2021 மே மாதம் 20 ஆம் திகதி விபத்துக்குள்ளாகி ஜூன் மாதம் மாதம் 2 ஆம் திகதி மூழ்கிய எக்ஸ்பிரஸ் முத்து கப்பலின் சிதைவுகளை அகற்றுவதை அவதானிப்பதற்காக விஜயம் செய்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.

மற்ற இழப்பீடு கோரப்பட்டு வருவதாகவும் இவர் மேலும் கூறினார். கப்பல் தீப்பிடித்த போது சுற்றாடல் அனர்த்தத்தை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் தீ விபத்துக்குள்ளான பின்னர் கப்பலில் இருந்து கடலில் விழுந்த பொருட்களை அகற்றும் பணிகள் 90 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனினும் இதனால் சிரமத்திற்கு உள்ளான சுமார் 15,000 மீனவர்களுக்கு முதற்கட்டமாக 420 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் இரண்டாம் கட்டமாக 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படடவுள்ளதாகவும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!