September 27, 2022

மாமல்லபுரத்தில், இன்று 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை சர்வதேச பட்டம் விடும் திருவிழா

சென்னை: இந்த ஆண்டு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலமாக தமிழகத்திற்கு உலக அளவில் பெரும் பெருமை தேடித்தந்ததிருவிழா நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த திருவிழாவில் அமெரிக்கா, தாய்லாந்து, உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்து கொள்ளஉள்ளனர். முன்னதாக இந்த விழாவிற்காக மாமல்லபுரம் ஈ.சி.ஆர். சாலை அருகே உள்ள 15 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமான மேடைகள், மின்விளக்குகள், வாகனங்கள் செல்ல சாலை வசதிகள் ஆகியவற்றை அமைக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வந்தது.

மேலும் இந்த திருவிழாவில் பல்வேறு விலங்குகள், மீன்கள், பறவைகள் போன்றவை பலூன் வடிவில் பட்டங்களாக பறக்கவிடப்பட உள்ளன. சுற்றுலா துறைக்கு சொந்தமான கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நடைபெறும் இந்த விழாவுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக விறக்கப்படுகின்றன. இந்த பட்டம் விடும் திருவிழாவில் அனைத்து வயதினரும் பங்கேற்களலாம் எனக் கூறப்படும் நிலையில், பெரியவர்களுக்கு ரூ. 150 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவின்போது இசைக்கச்சேரிகள், உணவு திருவிழா போன்றவையும் நடைபெறும் .

மேலும் இந்த திருவிழாவில் பார்வையாளர்களுக்கென பிரத்யேக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ள சிறுவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர்.மேலும் நிகழ்ச்சிக்கு www.tnikf.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!