September 27, 2022

உக்ரைனில் கிடைக்கும் வெடிக்காத வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்ய பல ஆண்டு காலம் ஆகும் – உள்துறை அமைச்சர்

கீவ் : ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக உக்ரைனில் இருந்து 30 லட்சத்து 20 ஆயிரம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 6.5 மில்லியன் மக்கள் உக்ரைனுக்குள் போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து பிற பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நகரங்களில் சிக்கித் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைன் நகரங்களில் கிடக்கும் கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்ய பல ஆண்டு காலம் ஆகும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி கூறுகையில், கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் கிடக்கும் வெடிக்காத வெடிகுண்டுகள் மக்களுக்கு உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. கண்ணிவெடியை அகற்றும் நிபுணர்களின் குழுக்களை தயார் செய்யுமாறு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது. போர் முடிந்தவுடன் உக்ரைனில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள மேற்கத்திய நாடுகளின் உதவி தேவைப்படும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!