December 2, 2022

இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக இவரா?… ஷேன் வாட்சன் தகவல்…

இந்தியா  : 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை நடைபெறுகிறது. சில நாட்களுக்கு முன்பு, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.

டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகுவதாக பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து பும்ராவுக்கு பதிலாக சிராஜை சேர்க்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்திய அணியில் பும்ரா விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக சிராஜை தேர்வு செய்வேன். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் வேகம் மற்றும் பவுன்ஸ் தான் முக்கியம்.

கடந்த  இரண்டு ஆண்டுகள் ஐபிஎல்லில் சிராஜ் புதிய பந்தில் சிறப்பாக செயல்பட்டார். கடைசியில் சிறப்பாக பந்துவீசினார். , அவரது பந்துவீச்சு ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.மேலும் பும்ரா இல்லாத இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பு குறைவு என்றும் வாட்சன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!