வரிசையாக படங்கள் தோல்வி… விரக்தியில் கீர்த்தி சுரேஷ்

சென்னை:வரிசையாக படங்கள் தோல்வி அடைவதால் கீர்த்தி சுரேஷ் வேதனையில் இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் குறைந்த நாட்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார்.அதுமட்டுமல்லாமல் தேசிய விருதையும் பெற்று சிறந்த நடிகை என்பதையும் நிரூபித்துள்ளார். தமிழ் , தெலுங்கு , மலையாளம் , ஹிந்தி , என பன்மொழி படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை அண்மையில் இவர் நடித்த அனைத்து படங்களும் தோல்வியே சந்தித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் இவர் நடித்த மலையாள படம் ஒன்று படுதோல்வியை சந்தித்துள்ளது.
ஏற்கனவே பிரபல நடிகர் டொவினோ தாமஸ் படங்கள் வரிசையாக தோல்வியடைய, கீர்த்தியுடன் இவர் நடித்த படமும் மோசமான தோல்வியடைய ரசிகர்கள் செம ஷாக்கில் உள்ளனர் .