October 2, 2022

நமது ஒற்றுமையை உறுதிப் படுத்துவோம் – ஜி.கே.வாசன்

சென்னை : த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது பாரத நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏற்றுங்கள்.

தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்தின் சார்பாக 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி நமது இந்திய தேசிய கொடியை அனைவரது இல்லங்களிலும் பறக்க விட்டு நமது உள்ளத்திலும், இல்லத்திலும் உள்ள தேசப் பற்றினை பறைசாற்றுவோம்.

நமது ஒற்றுமையை உறுதிப் படுத்துவோம். மக்கள் தலைவர் மூப்பனாரின் தாரக மந்திரமான வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்த தொடர்ந்து பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!