October 5, 2022

டெண்டர் முறைகேடு… சிபிஐ விசாரிக்க துணைநிலை ஆளுநர் உத்தரவு

புதுடில்லி: மதுபான ஆயத்தீர்வை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து டெண்டர் முறைகேடு நடந்திருப்பதாக சி.பி.ஐ., விசாரிக்க துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது முதல்வர் கெஜ்ரிவால் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

டில்லியில் உள்ள ஆம்ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் ஆயத்தீர்வை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த திருத்ததின்படி மது பான தயாரிப்பாளர்கள் , மது பானம் விற்பது தொடர்பான லைசென்ஸ், மது வாங்கும் டெண்டர் , மதுக்கடைகள் திறக்க அனுமதி உள்ளிட்டவை மூலம் பலரும் கோடிக்கணக்கில் லாபம் பெற்றுள்ளதாக பா.ஜ., தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் மது பான ஆலைகளுக்கு கோவிட் காலத்தில் பல சலுகைகள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனை விசாரித்த துணை நிலை ஆளுநர் வினய்குமார் சாக்சேனா சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார். இதில் ஆயத்தீர்வை துறையை கவனிக்கும் துணை முதல்வர் சிசோடியா விசாரணை வளையத்திற்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில் ; குற்றச்சாட்டுகள் முழுவதும் தவறானவை. துணை முதல்வர் சிசோடியாவை 22 வருடங்களாக எனக்கு தெரியும். அவர் மிக நேர்மையானவர். அவரை கைது செய்ய சிலர் துடிக்கின்றனர். அவர் டில்லிக்கு செய்து வரும் நல்ல பணிகளை தடுக்க முயற்சி நடக்கிறது. உண்மை எதையும் மறைக்க முடியாது, எதற்கும் அஞ்ச மாட்டோம் என்றார்.

சமீபத்தில் சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் உலக நகர மாநாட்டில் பங்கேற்க கெஜ்ரிவாலுக்கு கவர்னர் அனுமதி மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!