December 10, 2022

புகழ் பெற்ற சிதம்பரம் கோயிலில் மஹா ருத்ர ஹோமம்

சிதம்பரம்: திரவிய மஹாபிஷேகம்… சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஐம்பூதத் தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ ராஜமூர்த்திக்கு வரும் செப்.9-ம் தேதி வெள்ளிக்கிழமை மஹா ருத்ர ஹோமம், ஸகல திரவிய மஹாபிஷேகம் நடைபெறுகிறது.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிவகாமிசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு வருடத்திற்கு ஆறு முறை மகா அபிஷேகம் நடைபெறும். ஆவணி மாத மகாபிஷேகம் வருகிற செப்.9-ம் தேதி வெள்ளிக்கிழமை மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. செப்.7-ம் தேதி புதன்கிழமை காலையில் கணபதி ஹோமம் அன்று மாலை சிகாம சுந்தரி ஆனந்த நடராஜமூர்த்திக்கு அனுக்ஞை பூஜை , 8-ம் தேதி வியாழக்கிழமை காலையில் நவகிரக ஹோமம், அன்று மாலை ஆசார்யவர்ணம், மதுபர்க்கம் அங்குரம், பிரதிசரம், ரக்ஷா பந்தனம், ஸ்ரீதனபூஜை ஆகியவை நடைபெறுகிறது.

செப்.9-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை சுவாமிக்கு விசேஷ ரகசிய பூஜை, சுவாமிக்கு லஷார்ச்சனை கட ஸ்தாபனம், மகா ருத்ர ஜபம், மகா ருத்ர ஹோமம் பின்னர் மகா தீபாராதனை நடைபெறுகிறதுய நண்பகல் வஸோர்த்தாரை ஹோமம், ஆகியவற்றைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கடயாத்ராதானம் புறப்பட்டு, கனகசபையில் ஸ்ரீமந் ஆனந்த நடராஜமூர்த்தி மற்றும் சிவகாமசுந்தரிக்கு சகல திரவிய மஹாபிஷேகம் நடைபெறுகிறது.

மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சி.எஸ்.எஸ் ஹேமசபேச தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!