August 18, 2022

ஆய்வுப்பணிக்கு சென்ற இடத்தில் கூழ் வாங்கி குடித்த மேயர் பிரியா

சென்னை: ஆய்வுப்பணிக்கு சென்றவர் கூழ் குடித்தார்… சென்னையில் மேயர் பிரியா பல்வேறு இடங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அதேபோல் மக்களை சந்தித்து பல்வேறு உதவி பொருட்களை வழங்கினார். அப்போது கூழ் கடையை கண்டவர் காரை நிறுத்தச் சொல்லி கூழ் வாங்கி குடித்தார்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த வாரம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கல்லீரல் சிகிச்சை பிரிவிற்காக அமைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்தில் மேயர் பிரியா பார்வையிட்டது இணையம் முழுக்க வைரலானது. அவர் வேகமாக காரில் ராஜீவ் அரசு பொது மருத்துவமனைக்கு வந்தார். கையில் போனை வைத்துக்கொண்டு காரில் இருந்து இறங்கி தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அவர் வேகமாக ஓடி சென்றது வைரலானது.

நேற்று கோடம்பாக்கம் மண்டலத்தில் மேயர் பிரியா பார்வையிட்டார். கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-136 சிவன் பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை துறை மூலம் வீடுகளில் இருந்து பெறப்பட்ட காய்கறி கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தினை பொதுமக்கள் பயண்பாட்டிற்கு மேயர் பிரியா வழங்கினார். இந்த திட்டத்தின் படி காய்கறி கழிவுகள் மக்களிடம் இருந்து வாங்கப்பட்டு அதில் உரம் தயாரிக்கப்பட்டது. நவீன முறைப்படி அந்த உரம் உருவாக்கப்பட்டது.

இதையடுத்து அந்த உரம் மீண்டும் கழிவுகள் வாங்கப்பட்ட மக்களிடமே திருப்பி கொடுக்கப்பட்டது. இதற்காக மேயர் பிரியா கோடம்பாக்கத்தில் பல்வேறு வீடுகளில் ஏறி இறங்கினார். அதன்பின் பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க நகர், புளியந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை அவர் பார்வையிட்டார். கோடை காலத்தில் வெளியே சென்றதில், அவருக்கு தாகம் ஏற்படவே கூழ் கடை ஒன்றை பார்த்ததும் உடனே காரை நிறுத்தும்படி கூறினார். நிறுத்துங்க.. நிறுத்துங்க.. கூழ் சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்று கூறினார்.

சாலை ஓரத்தில் அந்த கூழ் கடை பெண் ஒருவர் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து அங்கே நின்றதும், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தார். பின்னர் அவரும் அங்கேயே கூழ் வாங்கி குடித்தார். பின்னர் மேயர் பிரியாவும், அங்கு இருந்த மற்ற அதிகாரிகளும் அதே கடையில் கூழ் வாங்கி குடித்தனர். சாலையோர தள்ளுவண்டியில் சென்னை மேயர் பிரியா கூழ் வாங்கிக் குடித்தது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!