September 27, 2022

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு

டெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரின்போது, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரில் அக்னிபாத், விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின.

கடும் அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தற்போது பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. வரும் 12-ம் தேதி வரை நடைபெறவிருந்தது. இந்நிலையில், முன்னதாகவே நிறைவடைந்துள்ளது.

இதனையடுத்து, நடைபெறவுள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!