September 30, 2022

உக்ரைனின் கீவ் பகுதியில் மேலும் 900 உடல்கள்… உலக நாடுகள் அதிர்ச்சி

உக்ரைன்: உக்ரைனின் கீவ் பகுதியில் மேலும் 900 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதை எதிர்க்கும் ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 அன்று உக்ரைனை ஆக்கிரமித்தது. போருக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் அழிக்கப்பட்டன. உக்ரைன் குடிமக்கள் மீதும் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

சில நாட்களுக்கு முன்பு கீவ் அருகே புச்சா பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள் கைவிலங்குகளால் சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது உலக நாடுகளால் கண்டிக்கப்படுகிறது. தலைநகர் கியேவில் ரஷ்யப் படைகள் நடத்திய தடுப்பு நடவடிக்கையின் போது கீவ்மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 900 உடல்கள் கைப்பற்றப்பட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

அவர்களில் 95% பேர் சுடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மக்களை சித்திரவதை செய்து ரஷ்யா படையினர் கொன்று வருகின்றனர் என்று உக்ரைன் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!