March 28, 2024

தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’ படத்தில் இசை வெளியீட்டு விழா

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ள இப்படம் தெலுங்கிலும் நேரடியாக வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது .

சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .அதன்படி ‘வாத்தி’ படத்தின் இசை வெளியீடு பிப்ரவரி 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தகவலை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. நீண்ட நாட்களாக இசை வெளியீட்டிற்காக காத்திருந்த ரசிகர்கள் தற்போது இந்த அறிவிப்பால் உற்சாகத்தில் உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!