November 28, 2022

நயன்தாராவின் 75வது படம்….லேட்டஸ் தகவல்….

சென்னை : திருமணம் ஆனதும் போதும் நயன்தாராவின் அலப்பறை தாங்கமுடியலை . இதுதான் கோலிவுட் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. திருமணமாகி மூன்று மாதங்களுக்கு மேலாகியும் நயன்தாரா இன்னும் தேனிலவில் இருக்கிறார்.

இதனால் இவரை வைத்து படம் தயாரிக்க காத்திருக்கும் பல இயக்குனர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். ஏனெனில் திருமணத்திற்கு பிறகு இயக்குனர்களுக்கு பல புதிய கண்டிஷன்களை போட்டு வருகிறார். அதுமட்டுமின்றி தான் முடிக்க வேண்டிய அனைத்து படங்களின் படப்பிடிப்பையும் இழுத்தடித்து வருகிறார்.

யாராவது படத்தை சீக்கிரம் முடிக்கச் சொன்னால், என்னால் இப்போது படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது. அவசரப்பட்டால்  வேறு ஒரு  ஹீரோயினை வைத்து முடித்து விடுங்கள் என்று ஆணவத்துடன் கூறுகிறார்.

சமீபத்தில் அன்னபூரணி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் தற்போது படத்தை அடுத்த வருடம் பார்க்கலாம் என்று கூறி இயக்குனர் தலையில் இடியை போட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவிருந்த இயக்குனர் தற்போது அதிருப்தி அடைந்துள்ளார்.

நயன்தாராவின் 75வது படமாக உருவாகும் இந்தப் படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. மேலும் இந்த படத்திற்காக நயன்தாரா 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இப்படியொரு குண்டை போட்டுள்ளார்.

இதனால் படத்தை எப்போது தொடங்குவது என்பதில் தயாரிப்பு தரப்பு பெரும் குழப்பத்தில் உள்ளது. இதுதான் தற்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எதுவாக இருந்தாலும் தயாரிப்பாளரைப் பற்றி சிந்திக்காமல் நயன்தாரா நடிப்பதை பலரும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!