செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா நிகழ்ச்சியை நடத்த நயன்தாராவின் நிறுவனம் விருப்பம்

சென்னை : சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா நிகழ்ச்சியை நடத்த நயன்தாராவின் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. நயன்தாரா நடிகை, சமீபத்தில் நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன்ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இதையடுத்து, நயன்தாரா – விக்னேஷ் சிவன் நிறுவனம் உள்பட ஐந்து நிறுவனங்கள் செஸ் ஒலிம்பியாட்டின் துவக்க விழா நிகழ்ச்சியை நடத்த விண்ணப்பித்துள்ளது. டெண்டரில் இறுதியாகும் ஐந்து நிறுவனங்களில் ஒன்று செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை நடத்தும் என கூறப்பட்டுள்ளது.