September 27, 2022

காங்கிரசையோ அல்லது சித்தராமையாவையோ மிரட்ட முடியாது – டி.கே.சிவக்குமார்

பெங்களூரு : சித்ரதுர்காவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்தபோது, சித்தராமையா வெறும் காங்கிரஸ் தலைவர் மட்டுமல்ல. அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். குடகு மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட சித்தராமையா சென்றுள்ளார். மக்கள் பிரச்சினைகளை சந்திக்கும்போது, அரசை தட்டி எழுப்பும் வேலை எதிர்க்கட்சிக்கு உள்ளது. அந்த கடமையை செய்தால் பா.ஜனதாவினர் முட்டை வீசுவது, கருப்பு கொடியை காட்டுவது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இவ்வாறு செய்து காங்கிரசையோ அல்லது சித்தராமையாவையோ மிரட்ட முடியாது. முட்டை வீச்சு, கருப்பு கொடி காட்டுவது போன்ற மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். பா.ஜனதாவினரை இந்த அரசு தடுக்காவிட்டால் காங்கிரசும் போராட்டம் நடத்தும். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கர்நாடகத்தில் 510 கிலோ மீட்டர் நடைபெறும். கர்நாடகத்தில் மொத்தம் 21 நாட்கள் இந்த யாத்திரை நடைபெற உள்ளது.

டெல்லியில் இருந்து ஒரு குழு வந்து அவர் பயணிக்கும் பாதையை ஆய்வு செய்ய உள்ளது. சித்தராமையா மீது முட்டை வீசியவர்கள் காங்கிரசார் என்று பா.ஜனதாவை சேர்ந்த போப்பையா எம்.எல்.ஏ. கூறியுள்ளார். முதலில் அவரை கைது செய்ய வேண்டும். பா.ஜனதாவின் மறுபெயர் பொய். தாங்கள் செய்த விஷயத்திற்காக மற்றவர்கள் மீது பழிபோடுவது கோழைத்தனம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!