December 10, 2022

எனக்கு பிரதமராகும் ஆசையோ மற்றும் நோக்கமோ கிடையாது – நிதிஷ் குமார்

டெல்லி : பீகாரில் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். வருகிற பொது தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை உருவாக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் ஈடுபட்டு வருகிறார்.

இதனையடுத்து, பா.ஜ.க.வுக்கும், ஐக்கிய ஜனதா தள கட்சிக்கும் இடையே வார்த்தை போர் நீடித்தது. நிதிஷ் குமார் தனது வாழ்வில் ஒரு போதும் பிரதமராக முடியாது. அவரால் பிரதமர் வேட்பாளராக கூட முடியாது என்று பா.ஜ.க. நாடாளுமன்ற மேலவை எம்.பி. மற்றும் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியான சுஷில் குமார் மோடி கூறினார்.

இந்நிலையில், நிதிஷ் குமார் இன்று டெல்லி சென்றுள்ளார். பீகாரில் பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்து கொண்ட பின், நிதிஷ் குமார் டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும். டெல்லியில் நிதிஷ் குமார் பேட்டி அளித்தபோது, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து விட்டால், பின்னர் ஒரு நல்ல சூழல் உருவாக்கப்படும். எனக்கு பிரதமராகும் ஆசையோ மற்றும் நோக்கமோ கிடையாது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!