October 5, 2022

தென்கொரியா எல்லை அருகே பீரங்கி குண்டுகளை வீசி சோதனை நடத்திய வடகொரியா

சியோல் : பொருளாதார தடைகள் மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள வடகொரியா தொடர்ந்து ராணுவ திறனை வலுப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா வரை சென்று தாக்கும் வல்லமை படைத்த கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்தது உலக நாடுகளை அதிரவைத்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு அணு குண்டு சோதனையை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில், வடகொரியா நேற்று முன்தினம் தென்கொரியா எல்லைக்கு அருகில் பீரங்கி குண்டுகளை கடலில் வீசி சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்தது. தற்போது வடகொரியாவின் எல்லையில் இருந்து 40-50 கி.மீ. தொலைவில் உள்ள தென்கொரியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட பெருநகர பகுதிக்கு அருகில் பீரங்கி குண்டு சோதனை நடத்தப்பட்டிருப்பது அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!