December 8, 2022

அரசியல் கட்சிகளின் தேர்தல் நிதி பத்திரங்கள் விற்பனை குறித்து அறிவிப்பு

புதுடில்லி: குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப் பேரவைகளுக்கு நடப்பாண்டு இறுதியில் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த விற்பனைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை முறைப்படுத்தும் நோக்கில் தோ்தல் நிதிப் பத்திரங்கள் நடைமுறையை பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

அதன்படி, ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபா் ஆகிய மாதங்களின் முதல் 10 நாள்களுக்கு எஸ்பிஐ-யின் 29 கிளைகளில் தோ்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில், அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் 10-ஆம் தேதி வரை 22-ஆவது முறையாகத் தோ்தல் நிதிப் பத்திரங்களை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை, கொல்கத்தா, குவாஹாட்டி, திருவனந்தபுரம், பாட்னா, சண்டீகா், மும்பை, ஸ்ரீநகா், காந்திநகா், போபால் உள்ளிட்ட 29 நகரங்களில் உள்ள எஸ்பிஐ-யின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தோ்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

வாங்கப்பட்ட நாளில் இருந்து 15 நாள்களுக்குத் தோ்தல் நிதிப் பத்திரங்கள் செல்லுபடியாகும். அந்த அவகாசத்துக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் நிதிப் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தோ்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளிப்பவரின் விவரங்கள், சம்பந்தப்பட்ட கட்சிகளுக்குத் தெரிய வராது. அதனால், யாரிடமிருந்து கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன? என்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள இயலாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!