August 12, 2022

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை பிரியா பவானி சங்கர்

சென்னை: முற்றுப்புள்ளி வைத்தார்… செய்தி தொகுப்பாளராக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் மேயாதமான் படத்தில் வாய்ப்பு கிடைக்க, தனது சிறந்த நடிப்பின் மூலம் அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார்.

தற்போது பிரியா பவானி சங்கர் பல படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் தன்னுடைய கல்லூரி காலத்திலிருந்து உடன் படித்த ராஜ்வேல் என்பவரை பிரியா பல வருடமாக காதலித்து வந்தார். இதைப் பலமுறை பிரியா பவானி ஷங்கர் தனது சோசியல் மீடியாவில் உறுதி செய்துள்ளார்.

மேலும் நாங்கள் யாருக்காகவும் எங்கள் காதலை விட்டுக் கொடுக்க மாட்டோம், நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்றும் பலமுறை பிரியா பவானி ஷங்கர் கூறியுள்ளார். இந்நிலையில் இவர்களுடைய காதல் பிரேக் அப் ஆகி விட்டதாக செய்தி வெளியானது.

இந்நிலையில் இந்த வதந்திக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தன் காதலனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் ப்ரியா பவானி ஷங்கர் பதிவிட்டுள்ளார். இதனால் இவர்கள் இருவரும் இன்றுவரை காதல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!