பெயர் மாற்றம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்

மும்பை: அமைச்சவை ஒப்புதல்… மஹாராஷ்டிராவில் அவுரங்காபாத் மாவட்டம் சம்பாஜி நகர் எனவும், உஸ்மனாபாத் நகரம், தாராஷிவ் எனவும் பெயர் மாற்றம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மஹாராஷ்டிரா சிவசேனா கட்சி முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. இதில் தற்போதைய அரசியல் நிலவரம் அதிருப்தி சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதில் மஹாராஹஷ்டிராவில் பெரிய மாவட்டங்களில் ஒன்றான அவுரங்காபாத் மாவட்டம், சம்பாஜிநகர் எனவும், உஸ்மனாபாத் நகர் தாராஷிவ் எனவும், நவி மும்பை சர்வதேச விமான நிலையம், டி.பி. பாட்டீல் சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்ற செய்ய முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.