April 24, 2024

ரஷ்ய படைகள் பதில் தாக்குதல்: 4 மாடி பல்கலைக்கழக கட்டிடம் சேதம்

உக்ரைன்: ரஷ்யப் படைகள் நடத்திய பதில் தாக்குதலில் மைய உக்ரைனில் நான்கு பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிவ்யி ரி எனும் நகரத்தில் உள்ள குடியிருப்பு, பல்கலைக்கழகக் கட்டத் தொடரின் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தின. இந்தக் குண்டுத் தாக்குதலில் பலரும் இடிபாடிகளில் சிக்கிக்கொண்டனர் என்று உக்ரைன் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இரண்டு ஏவுகணைகள் தாக்கியதில், ஒன்று குடியிருப்புக் கட்டடத்தின் நான்காவது முதல் ஒன்பதாவது மாடிவரையிலான பகுதியை நாசமாக்கியது. மரங்கள் வரிசையாகக் காணப்படும் அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த கார்களும் இந்தத் தாக்குதலில் சேதமடைந்தன. அந்தப் பகுதியிலிருந்து கரும்புகை எழுந்ததைப் பார்க்க முடிந்தது என அமைச்சர் இகோர் கிளிமென்கோ கூறினார்.

இந்த தாக்குதலில், நான்கு மாடி பல்கலைக்கழக் கட்டடமும் தாக்கி நாசமாக்கப்பட்டது. மொத்தம் 53 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் பத்து வயது சிறுமி ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவ்யி ரியில் ரஷ்யப் படைகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துவது வழக்கம். அந்த வகையில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களிலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கார்கிவ் வட்டாரத்தில் வீட்டில் இருந்த 70 வயது பாட்டி ஒருவர் ரஷ்யப் படையின் தாக்குதலால் உயிரிழந்தார். இசியும் என்கிற கிராமத்தைச் சேர்ந்த பாட்டி மட்டுமல்லாமல், தெற்கு உக்ரைனிய நகரான கெர்சனில் இன்னுமொரு குடிமகன் ஒருவரும் கொல்லப்பட்டார்.

ரஷ்யப் படைகள் ஒரே நாளில் 12 நகரங்கள், கிராமங்களில் தாக்குதலில் ஈடுபட்டன.

டொனெட்ஸ்க் மாநிலத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஏழு பேர் காயம் அடைந்தனர் என்று அந்த மாநிலத்தின் ஆளுநர் பாவ்லோ கிரிலெங்கோ கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!