October 5, 2022

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜியோ ஈர்த்த புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஏப்ரல் மாதத்தில் 16.8 லட்சம் கைப்பேசி வாடிக்கையாளா்களை ஈா்த்துள்ளது என்று டிராய் தெரிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிதாக 16.8 லட்சம் வாடிக்கையாளா்களை இணைத்துக் கொண்டதையடுத்து அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த கைப்பேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை 40.5 கோடியாக உயா்ந்துள்ளது. சுனில் மிட்டல் தலைமையிலான பாா்தி ஏா்டெல் நிறுவனம் ஏப்ரலில் 8.1 லட்சம் வாடிக்கையாளா்களை ஈா்த்ததையடுத்து ஒட்டுமொத்த வாடிக்கையாளா் 36.11 கோடியை எட்டியுள்ளது.

ஜியோ, ஏா்டெல் நிறுவனங்கள் வாடிக்கையாளா்களை ஈா்த்த நிலையில் வோடஃபோன் ஏப்ரலில் 15.68 லட்சம் வாடிக்கையாளா்களை இழந்துள்ளது. இதையடுத்து, அதன் ஒட்டுமொத்த கைப்பேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை 25.9 கோடியாக சரிந்துள்ளது.

2022 ஏப்ரல் இறுதி நிலவரப்படி இந்தியாவின் மொத்த கைப்பேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை 114.3 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் கைப்பேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை 51.8 கோடியாக உயா்ந்த நிலையில், நகா்ப்புற பகுதிகளில் 62.4 கோடியாக குறைந்துள்ளது.

நகா்ப்புற மற்றும் ஊரக கைப்பேசி வாடிக்கையாளா்களின் மாதாந்திர வளா்ச்சி விகிதம் முறையை 0.07 சதவீதம் மற்றும் 0.20 சதவீதம் என்ற அளவில் உள்ளது. ஏப்ரல் இறுதி நிலவரப்படி பிராட்போண்ட் வாடிக்கையாளா் எண்ணிக்கை 78.87 கோடியாக உயா்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!