August 12, 2022

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

சென்னை : அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை உரிய நேரத்தில் உரியவர்களுக்கு வழங்கும் பணியினை நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஊழியர்களின் அகவிலைப்படியை உரிய நேரத்தில் வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டவுடன் அந்த ஊதிய உயர்வு தங்களுக்கும் வரும் என்று நியாய விலைக் கடைகளில் பணிபுரிவோர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். நீண்ட நாட்களாக எந்த உயர்வையும் பெறாமல் பணியை மட்டும் நியாய விலைக் கடை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் உடனடியாக அகவிலைப்படி உயர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!