தஞ்சை அருகே புகையிலை பொருட்கள் விற்பனையா? அதிகாரிகள் அதிரடி ஆய்வு

தஞ்சை: தஞ்சை அருகே வல்லத்தில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக அரசு புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. மேலும் சட்டத்திற்கு விரோதமாக யாராவது புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்கின்றனர்.
அந்த வகையில் சுகாதாரத் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் இளங்கோவன் தலைமையில் வல்லம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடைத்தெருக்களில் புகையிலை பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த ஆய்வுப்பணியில் வல்லம் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் அகிலன், சுகாதார மேற்பார்வையாளர் சிங்காரவேல் சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், பழனிசாமி, குணசேகரன், அகீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.