September 30, 2022

டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதன்பின், அஜய் ஞானமுத்துவிற்கு நயன்தாராவை வைத்து ’இமைக்கா நொடிகள்’ என்ற படத்தை இயக்க வாய்ப்பு வந்தது. பிறகு விக்ரமின் கோப்ரா என பல படங்கள் கிடைத்தது. தற்போது டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிட்டததட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இதன் அறிவிப்பை டிமான்டி காலனி திரைப்படம் வெளியான 7 ஆண்டுகள் கழித்து அதே நாளில் இன்று டிமான்டி காலனி 2 படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!