July 2, 2022

பூதலூர் அரசு மருத்துவமனையில் 100 எல்பிஎம் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் திறப்பு

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பூதலூர் அரசு மருத்துவமனையில் 100 எல்பிஎம் ஆக்ஸிஜன் ஜெனரேட்டரை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன், மதர் தெரசா ஹெல்த் சென்டர் என்ற மருத்துவமனையை நிறுவி குறைந்த கட்டணத்தில் ஏழை எளிய மக்களுக்கு நவீன மருத்துவ சிகிச்சையை அளித்து வருகிறது.

தொடர்ந்து மதர் தெரசா பவுண்டேசன் கொரோனா நோய் தொற்று காலத்தில் பொது மக்களுக்கு தடையில்லாமல் சிகிச்சை அளித்திடவும் மற்றும் எதிர்கால பயன்பாட்டிற்காகவும் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் நிதி உதவியுடன் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ரூ.25 லட்சம் மதிப்பில் ஒரே நேரத்தில் இருபது நோயாளிகள் பயன்பெறும் வகையில் 100 எல்பிஎம் ஆக்ஸிஜன் ஜெனரேட்டரை பூதலூர் அரசு மருத்துவமனையில் மதர் தெரசா பவுண்டேசன் அமைத்தது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு இத்திட்டத்தினை துவக்கி வைத்து ஆக்ஸிஜன் ஜெனரேட்டரை பூதலூர் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும் பவுண்டேசன் பல்வேறு துறைகளில் செய்து வரும் சேவைப்பணிகளைப் பாராட்டினார்.

திருவையாறு எம்எல்ஏக்கள் திருவையாறு துரை சந்திரசேகரன், தஞ்சை டிகேஜி நீலமேகம், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட சுகாதார இணை இயக்குநர் திலகம் மற்றும் பூதலூர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் சம்பத் ராகவன், கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். பவுண்டேசன் சேர்மன் சவரிமுத்து வரவேற்று மருத்துவத் துறையில் பவுண்டேசன் ஆற்றிவரும் பணிகளை விளக்கிக்கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!