August 16, 2022

இந்திய கொடியை பிடித்து ருமேனியாவின் புகாரெஸ்ட் வந்தடைந்த பாகிஸ்தான், துருக்கி மாணவர்கள்

கீவ் : உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 7-வது நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய படைகள் கீவ், கார்கீவ் நகரை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்குள்ள வெளிநாட்டினர் மேற்கு எல்லையோரத்தில் உள்ள அண்டை நாடுகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக போலந்து நாட்டில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இந்திய அரசு முழு வீச்சில் கீவ் நகரில் உள்ளவர்களை அண்டை நாடுகளுக்கு நகர்த்த முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக தற்போது கீவ் நகரத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். உக்ரைனின் அண்டை நாடுகளிடம் இந்திய அரசு, இந்தியாவை சேர்ந்தவர்களிடம் விசா கேட்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விலக்குகள் கேட்டிருந்தது. அண்டை நாடுகளும் அதற்கு சம்மதம் தெரிவித்தன.

இதனால், இந்திய கொடி ஏந்தி மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறினர். இந்திய கொடியும் செல்லும் மாணவர்களுக்கு அண்டை நாடுகள் எளிதாக அனுமதி அளித்தன.இந்நிலையில் மற்ற நாட்டின் மாணவர்களும் சிலர் இந்திய கொடியை ஏந்தி அண்டை நாடுகளுக்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான், துருக்கி மாணவர்கள் இருவர்கள் தாங்கள் தங்கிய குடியிருப்புகளில் உள்ள திரைச்சீலையை எடுத்து அதில் இந்திய கொடி வண்ணத்தை தெளித்து, இந்தியர்களின் உதவியுடன் கொடியை பிடித்துக் கொண்டு ருமேனியாவின் புகாரெஸ்ட் வந்தடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!