உருவ அடையாளங்கள் குறித்த தகவல் சேகரிப்பு மசோதா நிறைவேற்றம்

புதுடில்லி: மசோதா நிறைவேற்றம்… குற்றவாளிகளின் ‘பயோ மெட்ரிக்’ எனப்படும் உருவ அடையாளங்கள் குறித்த தகவல் சேகரிப்பு மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
நாட்டின் குற்றவியல் நடைமுறை சட்டத்தில், குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் குறித்த பயோ மெட்ரிக் தகவல்களை பதிவு செய்யும் உரிமையை போலீசாருக்கு வழங்குவது தொடர்பான மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இந்த மசோதா மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:இந்த சட்டத்தால், ஒருவரின் தனிப்பட்ட உரிமைகள் மீறப்படாது; ரகசியங்கள் வெளியாகாது. போலீஸ் மற்றும் தடயவியல் நிபுணர்களுக்கு உதவும் நோக்கில் தான், இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது .இவ்வாறு அவர் பேசினார்.பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, ஜன., 31 முதல், பிப்., 11 வரை நடந்தது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு, கடந்த மாதம் ௧௪ம் தேதி துவங்கியது. நாளை வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த பட்ஜெட் கூட்டத்தொடர், இன்றுடன் நிறைவு பெறும் என தெரிய வந்துள்ளது.