August 18, 2022

அசத்தல் சுவையில் பொட்டுக்கடலை குழம்பு செய்முறை

சென்னை: பொட்டுக்கடலைக் குழம்பு செய்து பார்த்து இருக்கீங்களா. செய்து பாருங்கள். அருமையான சுவையில் இருக்கும்.

தேவையானவை: சின்ன வெங்காயம் – 5, தக்காளி – 2, தேங்காய் துருவல் – கால் கப், பச்சைமிளகாய் – 5 அல்லது 6, பொட்டுக் கடலை – ஒரு டேபிள் ஸ்பூன், மல்லித்தழை – ஒரு கைப்பிடி,உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன். தாளிக்க: பட்டை – ஒரு துண்டு,எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கொடுத்திருக்கும் பொருட்களில், சின்ன வெங்காயம் முதல் உப்பு வரை அனைத்தையும்காயும் எண்ணெயில் போட்டு வதக்கி எடுத்து, ஆறவிட்டு அரைத்துக்கொள்ளுங்கள்.

மீண்டும் எண்ணெயைக் காயவைத்து, பட்டையைத் தாளித்து, அரைத்த மசாலாவில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து ஊற்றுங்கள். 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான குழம்பு இது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!