September 29, 2022

உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் வாங்க அனுமதி

புதுடில்லி : MOD (மினிஸ்ட்ரி ஆப் டிபென்ஸ்) கடந்த 2020ல் IAFகாக அஸ்ட்ரா எம்கே 1 ஏவுகணை 50 அலகுகளை வழங்கியிருந்தது. தற்போது கடற்படை மற்றும் விமானப்படையில் இந்த ரக ஏவுகணைகளை அதிகரிக்க MOD முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த ஏவுகணையை 250 அலகுகள் வாங்க அனுமதி அளித்துள்ளது.

இந்த அஸ்திரா எம்கே 1 விசுவல் ரேஞ்ச் ஏர் டு ஏர் ஏவுகணைகள் ஏற்கனவே பயன்பாட்டில் சிறந்துவிளங்குகிறது. மேலும் இந்திய கடற்படையின் இரன்டு பிரிவுகளிலும் SU-30MKI ரகம் செயல்பாட்டில் முன்னணியில் இருந்துவருகிறது. இதனால் இதன் உட்கொள்ளலை அதிகப்படுத்த அஸ்ட்ரா ஏவுகணைகளை அதில் இணைக்க MOD மற்றும் இந்திய விமானப்படை விரும்புகிறது.

அடுத்ததாக மிக் 29 UPG ரகங்களில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வான்-விமான ஏவுகணை திட்டங்களை செய்லபடுத்த உள்ள MOD 2023ல் AESA சீகருடன் அஸ்ட்ரா ரக ஏவுகணையை மேம்படுத்தி பயன்டுத்த உள்ளது. அதையடுத்தே வருடந்தோறும் எம்கே 1 அஸ்ட்ரா 100 அலகுகள் வாங்கப்படும் என MOD தெரிவித்துள்ளது.

HAL நிறுவனத்துடன் இணைந்து இந்திய விமானப்படை நான்கு SU 30MKI ஸ்க்வாட்ரான்களை இயக்கி பரிசோதனைப்பணியில் ஈடுபட்டுவருகிறது. இந்த ஸ்க்வாட்ரான்கள் அடுத்த 2023 மார்ச்சிற்குள் அஸ்ட்ரா எம்கே 1 BVRAAM களுடன் பொருத்தப்பட உள்ளது.எல்.சி.ஏ தேஜாஸ் எம்கே 1ஜெட்விமானத்தில் இருந்து அஸ்ட்ரா எம்கே தனது கேப்டிவ் பிளைட் ட்ரையல்களை நீண்டநாட்களுக்கு முன்னரே வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!