December 8, 2022

கார்த்தி ஜோடியாக மீண்டும் பிரபல நடிகை…..

சென்னை :  கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ராஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்தியாவை உலுக்கி வரும் முக்கியமான கதாநாயகி ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் அறிமுகமானார்.

அதன் பிறகு தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். இதற்கிடையில், ராஷ்மிகா மீண்டும் தமிழ் சினிமாவில் கார்த்தியுடன் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். ராஜு முருகனின் ‘ஜப்பான்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘புஷ்பா’ படத்தில் வில்லனாக நடித்த சுனில் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 2வது வாரத்தில் இருந்து தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும்  நடிகையான ராஷ்மிகா மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்கியது தமிழ் ரசிகர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!