December 8, 2022

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய படத்தின் டிரைலர் வெளியீடு….!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவியுடன் யோகி பாபு, காஜல் அகர்வால், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இவர் இயக்கிய இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா, ஆதித்யா கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு தினேஷ் புருஷோத்தமன். விஜய் நடிக்கும் படத்துக்கு ‘லவ் டுடே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் ‘லவ் டுடே’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘லவ் டுடே’ திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!