September 27, 2022

பீகாரில் மகா கூட்டணி நீடிக்குமா? – பிரசாந்த் கிஷோர் கருத்து கணிப்பு

பாட்னா : பீகாரில் கடந்த சில தினங்களுக்கு முன், மகாத்பந்தன் 2.0 கூட்டணி அமைந்தது. பா.ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, பீகார் முதல் மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து புதிய கூட்டணியை உருவாக்கி மீண்டும் முதல் மந்திரியாக பதவியேற்றுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 2024 லோக்சபா தேர்தல் வரையில், மகா கூட்டணியால் அதிகபட்சமாக நீடிக்கமா என அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஆன்லைன் வாக்கெடுப்பைத் தொடங்கினார். அதில் பயனர்கள் தனது கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

முன்னதாக புதிய கூட்டணி அரசு குறித்து பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், இனிமேல் பீகாரில் அரசியல் நிலைத்தன்மை திரும்பும் என நம்புகிறேன். பீகார் மக்களின் விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். புதிய அரசு முந்தைய அரசை விட சிறப்பாக செயல்படுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும், தேஜஸ்வி யாதவ் பீகாரில் தனிப்பெரும் கட்சியின் தலைவராக உள்ளார். மேலும் இந்த புதிய அமைப்பை இயக்குவதில் அவர் முக்கிய பங்கு வகிப்பார். பீகாரில் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் மாநிலத்திற்கு நல்ல மாற்றமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!