October 2, 2022

புதிய இந்தியாவின் வளர்ச்சியை உலகம் கண்டுள்ளது – ஜனாதிபதி

டெல்லி : நாடு முழுவதும் சுதந்திர தினம் இன்றுகோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று உரையாற்றியபோது, இந்தியா சுதந்திரம் பெற்ற நேரத்தில் வறுமை மற்றும் கல்வியறிவின்மை காரணமாக இந்தியாவில் ஜனநாயக ஆட்சியின் வெற்றி குறித்து பல சர்வதேச தலைவர்கள், நிபுணர்கள் சந்தேகம் கொண்டு இருந்தனர். ஆனால் இந்தியர்களாகிய நாம் சந்தேகிப்பவர்களைத் தவறென்று நிரூபித்தோம். ஜனநாயகத்தின் உண்மையான திறனைக் கண்டறிய உலகிற்கு உதவிய பெருமை இந்தியாவுக்கு உண்டு.

ஆண்டுதோறும் நவம்பர் 15ந் தேதி பழங்குடியினர் தினமாக கொண்டாடப்படும் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தேசிய கல்விக் கொள்கை எதிர்கால தலைமுறையை தொழில் புரட்சியின் அடுத்த கட்டத்திற்கு தயார் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது, அது நமது பாரம்பரியத்துடன் மீண்டும் இணைக்கிறது. கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில், பல வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் சாதனை சிறப்பாக உள்ளது.

உலகம் பெரும் பொருளாதார நெருக்கடி விளைவுகளை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் போது, ​​இந்தியா ஒன்றிணைந்து முன்னேறி வருகிறது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் உள்ளது. புதிய இந்தியாவின் வளர்ச்சியை உலகம் கண்டுள்ளது. சொந்த வீடு என்பது ஏழைகளுக்கு இனி கனவாக இருக்காது. சமூக நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை ஊக்குவிப்பதே சுதந்திர தினத்தின் முக்கியமான அம்சம். உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!