என் பணிகளை தொடர்வதில் உறுதி: பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்

பிரிட்டன்: பிரதமர் பணிகளை தொடர்வதில் உறுதி… பிரித்தானியப் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், தாம் பிரதமர் பொறுப்புக்கான பணிகளை தொடர்வதில் உறுதியுடன் உள்ளதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 10 இல் நான்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போரிஸ் ஜோன்சன் மீதான நம்பிக்கையீனத்தை வெளியிட்டிருந்தனர்.
பொது முடக்க காலத்தில் விதிகளை மீறி விருந்துபசாரங்களை நடத்தியமை தொடர்பில் அபராதம் பெற்றிருந்த போரிஸ் ஜோன்சன் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. என்பது பேசிய பிரதமர் தனது பணிகளை தொடர்பில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே வரிகளை குறைக்குமாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போரிஸ் ஜோன்சனுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதன் மூலம் கென்சவேட்டிவ் கட்சியில் மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்பதுடன், அதிகரித்து வரும் வாழ்க்கை செலவை மக்கள் சமாளிப்பதற்கு உதவும் எனவும் பிரதமருக்கு ஆதரவான உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.