August 20, 2022

இந்தியா மட்டுமே உதவுகிறது என பிரதமர் ரணில் பேச்சு

இலங்கை: இந்தியா மட்டுமே உதவுகிறது…. எரிபொருள் மற்றும் நிலக்கரி வழங்குவதற்கு எந்த நாடும் எங்களுக்கு உதவவில்லை. இந்தியா மட்டுமே எங்களுக்கு உதவுகிறது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “மின்சார சபையின் ஊழியர்களை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் உதவிக்காக இந்தியாவிடம் செல்லும்படி என்னைக் கேட்க வேண்டாம்.

எரிபொருள் மற்றும் நிலக்கரி வாங்குவதற்கு எந்த நாடும் எங்களுக்கு உதவவில்லை. எரிபொருள் மற்றும் நிலக்கரி வாங்குவதற்கு இந்தியா மட்டுமே எங்களுக்கு உதவுகிறது. தற்போது இந்திய கடன் வரம்பு மீறப்பட்டுள்ளது. விரைவில் இந்த வசதியை நீட்டிக்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களுக்கு எரிபொருள் மற்றும் மின்சாரம் தேவை.

நான் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் ஒரு இருட்டடிப்புக்கு சென்றால், இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள இந்தியா உதவுமென என்னால் உறுதியளிக்க முடியாது. நீங்கள் தெருக்களில் இறங்கி போராடலாம். ஆனால், மின்வெட்டுக்கு செல்ல வேண்டாம்”, எனக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!