August 20, 2022

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் பிவி சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

பாங்காக் : தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், ஜப்பானைச் சேர்ந்த அகானே யமகுச்சியும் பலப்பரீட்சை நடத்தினர்.

ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து முதல் செட்டை 21 -15 என கைப்பற்றினார். அதன்பின் அகானே யமகுச்சி 22 – 20 என வெற்றி பெற்றார். பின்னர், வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் 21 -13 என கைப்பற்றினார்.

இதன்மூலம், பி.வி.சிந்து அரை இறுதிச்சுற்றுக்க்கு முன்னேறினார். இன்று நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் பிவி சிந்து, சீன வீராங்கனை யு பெய் சென்னுடன் மோதுகிறார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!