December 8, 2022

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் மழை….

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்  மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. மழை காரணமாக போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மைதானத்தில் பெய்த கனமழையால் மைதானத்தின் ஆடுகளம் “கவர்களால்” மூடப்பட்டு உள்ளது. மழை குறுக்கிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மழை நின்ற பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!