October 2, 2022

மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு : இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு பொறுப்பில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதன்பின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.

பொருளாதார நெருக்கடி தீராததால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக கோரி இன்று தலைநகர் கொழும்பில் பொதுமக்கள் சார்பில் போராட்டம், பிரமாண்ட பேரணி நடந்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு நேற்று இரவே ராணுவ தலைமையகத்திற்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியது.

மேலும், சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்ட்த்திலும் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்கள் நலன் கருதி ராஜினாமா செய்துள்ளதாக ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!