August 20, 2022

விஜய் படத்தில் ரீமிக்ஸாகும் யூத் படத்தின் ஹிட் பாடல்

சென்னை: வாரிசு’ படத்திற்காக விஜய்யின் சூப்பர் பாடல் ஒன்று ரீமிக்ஸாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை செம உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜயின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் குடும்ப சென்டிமென்ட்டில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. மூன்று அண்ணன் ஒரு தம்பி என்று குடும்ப கதையாக இப்படம் உருவாகி வருவதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.‌

 

தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை வம்சி படைப்பள்ளி இயக்கி வருகிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமன் இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் விஜய்யின் நடிப்பில் உருவான ‘யூத்’ படத்தில் ஆல் தோட்டப் பூபதி பாடல் மிகவும் பிரபலமானது. இந்த பாடலுக்காக விஜய்யும், சிம்ரனும் இணைந்து ஆடிய ஆட்டம் இன்றைக்கும் பிரபலமானது. தற்போது இந்த பாடல் ‘வாரிசு’ படத்தில் ரீமிக்ஸாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!