அடுத்த காதலுக்கு மரியாதையாம்… ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: விஜய்யின் அடுத்த படம் காதலை மையமாக வைத்து தயாரிக்கப்படும் படம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் விஜய்க்கு அடுத்த காதலுக்கு மரியாதை ரெடி என்று ஆரவாரம் செய்து வருகின்றனர்.
பீஸ்ட் படத்திற்கு அடுத்தபடியாக தளபதி நடிக்கும் படம் தளபதி66 என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய் முதல் முறையாக பிற மொழி படத்தில் நடிக்க உள்ளதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கும் இப்படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்தப் படம் இதுவரை விஜய் நடித்த படங்களின் பட்ஜெட்டை விட மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப் போகிறதாம். தளபதி66 படம் ஏற்கனவே 200 கோடிக்கு மேல் பிஸ்னஸ் ஆகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படம் ஒரு லோ பட்ஜெட் படம் என சொல்கிறார்கள்.
தற்போது இந்த படத்திற்கான முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப்படத்தின் நாயகியை வருகிற பிப்ரவரி 14ம் தேதி அன்று அறிவிக்க இருக்கிறார்கள்.
பிப்ரவரி 14 காதலர் தினம் அன்று அறிவிப்பதால் இது ஒரு காதலை மையமாக வைத்து தயாரிக்கப்படும் படம் என்பது அப்பட்டமாக தெரிகிறது. இதை அறிந்த ரசிகர்கள் விஜய்க்கு அடுத்த காதலுக்கு மரியாதை ரெடி என்று ஆரவாரம் செய்து வருகின்றனர்.