September 29, 2022

மதம் குறித்து அவதூறு கருத்து கூறியதால் கான்பூரில் கலவரம்

கான்பூர்:’ கான்பூரில் கலவரம்… டிவி’ விவாதத்தின் போது, மதத்தை பற்றி அவதுாறாக கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறி, உ.பி., மாநிலம் கான்பூரில் ஒரு தரப்பினர் கடைகளை அடைக்கும்படி கூறியதால் கலவரம் ஏற்பட்டது.

சமீபத்தில் தனியார், ‘டிவி’ சேனலில் நடந்த விவாதத்தின் போது, பா.ஜ., சார்பில் பங்கேற்ற ஒருவர், முஸ்லிம் மதத்தை பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கான்பூர் மாவட்டத்தில் ஒரு தரப்பினர், கடைகளை அடைக்கும்படி கட்டாயப்படுத்தினர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் பெட்ரோல் குண்டுகளை வீசியும், கல்வீசியும் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், 18 பேரை கைது செய்தனர்.

இருப்பினும் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இது குறித்து போலீசார் தரப்பில கூறியதாவது: கலவரத்தில் ஈடுபட்டவர்களை வீடியோ காட்சிகள் வாயிலாக அடையாளம் கண்டுபிடித்துள்ளோம். விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வன்முறையில் இருவர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!