September 27, 2022

ஆளில்லா விமானங்களை வாங்க ரஷியா முடிவு… அமெரிக்கா தகவல்

உக்ரைன்: ஆளில்லா விமானங்களை வாங்க முடிவு… உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஈரானிடமிருந்து ஆளில்லா விமானங்களை வாங்க முடிவு செய்துள்ள ரஷியா, அதற்காக தங்களது அதிகாரிகளை 2 முறை ஈரான் அனுப்பியதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சுல்லிவன் கூறியதாவது: ரஷியாவிலிருந்து அதிகாரிகள் குழு ஒன்று, அண்மைக் காலத்தில் ஈரான் சென்றது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ஈரானிடமுள்ள தாக்குதல் திறன் கொண்ட ஆளில்லா விமானங்களைப் பாா்வையிடுவதற்காக அந்தக குழு அங்கு சென்றுள்ளது. தலைநகா் டெஹ்ரானுக்கு 190 கி.மீ. தொலைவில் உள்ள கஷான் விமானதளத்தில் அந்த ஆளில்லா விமானங்களை ரஷியக் குழு பாா்வையிட்டது.

இதன் மூலம், ஈரானிடமிருந்து ராணுவப் பயன்பாட்டுக்காக ஆளில்லா விமானங்களை வாங்க ரஷியா விரும்புவது உறுதியாகியுள்ளது. கடந்த மாதம் 8-ஆம் தேதியும் இந்த மாதம் 5-ஆம் தேதியும் ரஷியக் குழு ஈரானில் ஆளில்லா விமானங்களைப் பாா்வையிட்டதற்கான செயற்கைக்கோள் பட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதனை ஊடகங்களுக்கு அளித்துள்ளோம்.

உக்ரைன் போருக்காக ஒரு கூட்டணியை உருவாக்க ரஷியா விரும்புவதையும் உக்ரைன் மக்களைக் கொன்று குவிப்பதற்காக ரஷியாவுடன் ஈரான் கரம் கோா்க்கவிருப்பதையும் உலக நாடுகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.

 

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!