October 2, 2022

நாசா உடனான கூட்டணியை முடித்துக்கொள்ள ரஷியா முடிவு

மாஸ்கோ : ரஷிய அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸின் புதிய தலைவராக யூரி போரிசோவ் நியமிக்கப்பட்டுள்ளார். யூரி போரிசோவ் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று சந்தித்தபோது போரிசோவ் கூறுகையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷியா 2024-ம் ஆண்டுக்குப் பிறகு வெளியேறுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரஷியா சார்பில் தனி விண்வெளி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

போரிசோவின் இந்த அறிவிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷியா வெளியேற உள்ளதாக ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவன அதிகாரிகள் ஏற்கனவே கூறியதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷியாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும், ரோஸ்கோஸ்மாசும் இந்த மாத துவக்கத்தில் ஒரு உடன்பாடு மேற்கொண்டன. அதன்படி, அமெரிக்க விண்வெளி வீரர்கள் தொடர்ந்து ரஷிய ராக்கெட்டுகளையும், ரஷிய விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலங்களையும் பயன்படுத்த முடியும்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!