உக்ரைன் கலாச்சார மைய கட்டிடத்தை தகர்த்த ரஷ்யா

உக்ரைன்: கலாச்சார மையம் தகர்ப்பு… உக்ரைன் நாட்டின் Kharkivவில் Lozova பகுதியில் அமைந்துள்ள கலாச்சார மைய கட்டிடம் ஒன்றை ஏவுகணை மூலம் வெடிகுண்டு வீசி தாக்கி அழிக்கும் வீடியோ ஒன்று உக்ரைன் நாட்டின் அவசர கால சேவை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் கலாச்சார மையக் கட்டிடம் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டவுடன் அவை பயங்கரமாக வெடித்து சிதறுவதும் அங்கு அடர்த்தியான கரும்புகை அதிகளவில் வெளியாவதும் தெரிகிறது.
இதுதொடர்பான கூடுதல் தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.